ஜப்பான் நாட்டில் ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் முகமூடிகளை திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலககின் பல நாடுகளுக்கு பரவி மிரட்டி வருகிறது. அதில், சீனாவின் அண்டை நாடான ஜப்பானும் அடங்கும். எனவே அங்கிருக்கும் பொதுமக்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு அன்றாட பணிகளை செய்து வருகின்றனர். முகமூடி இல்லாமல் யாரையுமே பார்க்கமுடியவில்லை.
இந்த நிலையில் அந்நாட்டின் துறைமுக நகரமான கோபேயில் இருக்கும் ஜப்பான் செஞ்சிலுவை சங்க ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்த அட்டைப்பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த 6,000 கொரோனா வைரஸ் முகமூடிகள் திருடப்பட்டுள்ளன.
இதில் 4 பெட்டிகளில் இருந்த முகமூடிகளை மட்டும் காணவில்லை. இவற்றை திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதையடுத்து போலீசில் முகமூடியை திருடப்பட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஜப்பானில் முகமூடி தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதன் காரணமாக அதன் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை பயன்படுத்தி திருடப்பட்ட முகமூடிகளை கூடுதல் விலைக்கு விற்பதற்கு அவற்றை திருடியிருக்கலாம் என போலீசார் நினைக்கின்றனர்.