இந்நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 12.30 மணி அளவில் இந்த சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது அங்கு அதிவேகத்தில் வந்த கார் திடீரென மக்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில் பலர் தூக்கி வீசப்பட்டு, சிலர் காரின் சக்கரத்தில் மாட்டி நசுங்கினர். அதன் பின்னரும் நிற்க்கமால் சென்ற அந்த கார் ஒரு குப்பை லாரியின் மீது மோதி நின்றது. இந்த கோர விபத்தில் 20 வயதான ஒரு பெண்ணும், அவரது 2 வயது பெண் குழந்தையும் காரின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
Categories
ஜப்பானில் தறிகெட்டு ஒட்டிய கார்…… 2வயது குழந்தை உள்பட இளம்பெண் பலி…!!
