Categories
தேசிய செய்திகள்

அதிக லைக் வேணும்…. குடிமகன்களுக்கு மது கொடுத்த இருவர்… வைரலான வீடியோவால் சிக்கிய சோகம்!

ஐதராபாத்தில் குடிமகன்களுக்கு மது கொடுத்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர். 

கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 (இன்று) வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு, கர்நாடகா,  தெலுங்கான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருக்கும்  மதுக்கடைக்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.  இதனால் குடிமகன்கள் மது இல்லாமல் திண்டாடி வருகின்றனர். சிலர் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்கின்றனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் இருக்கும்  சம்பாபேட் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர்  ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் தனது பகுதியில் திண்டாடி வந்த குடிமகன்களுக்கு மது இலவசமாக வழங்கினார்.

Hyderabad Man Arrested for Distributing Free Alcohol Amid ...
அதுமட்டுமில்லாமல் மது பிரியர்களுக்கு தான் மது வழங்குவதை அவர் வீடியோவும் எடுத்துள்ளார். மேலும், அந்த வீடியோவுக்கு அதிகப்படியான லைக்குகள் கிடைக்க வேண்டும் என்று எண்ணிய அந்த நபர் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவிய நிலையில், போலீசாரின் கண்ணிலும் சிக்கியது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, ஊரடங்கை மீறி சட்ட விரோதமாக குடிமகன்களுக்கு மது வழங்கிய அந்த நபர் மற்றும் உடனிருந்த அவரது நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |