ஹைதராபாத்தில் உரிய சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்த அலுவலர் மீது விவசாயி ஒருவர் பெட்ரோல் ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் கரீம்நகர் அருகேயுள்ள சிகுருமமிடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பாஸ்புக் கேட்டு விவசாயி ஒருவர் விண்ணப்பித்திருந்தார். நீண்ட நாள்கள் ஆகியும் பாஸ்புக்கை வழங்காமல் அங்குள்ள ஊழியர்கள் விவசாயியை அலைக்கழித்துள்ளனர். இன்று மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு விவசாயி சென்றபோது அங்கிருந்த அலுவலருக்கும் விவசாயிக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த விவசாயி, தான் எடுத்துவந்திருந்த பெட்ரோலை அந்த அலுவலர் மீது ஊற்றியுள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சகோதரர்களுக்கிடையே உள்ள நிலப்பிரச்னை காரணமாகவே தங்களால் பாஸ்புக்கை வழங்க முடியவில்லை என்று வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.