Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி கிரிக்கெட் ஆட வந்தது இதுக்குத்தான்”… ரசிகருக்கு பதில் அளித்த வாசிம் ஜாஃபர்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தோனி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை உலகம் முழுவதும், 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால் நேற்று தொடங்குவதாக இருந்த 13-ஆவது சீசன் ஐபிஎல் தொடர், ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டபடி நடக்குமா? நடக்காதா? என்பதை கொரோனா தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம். எஸ் தோனியைப் பற்றி, முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் மனம் திறந்துள்ளார். ட்விட்டரில் #AskWasim என்ற ஹாஷ்டாக்கைப் பயன்படுத்தி ரசிகர்கள் என்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளைக் கேட்கலாம் என்றும், அதற்கு நான் பதிலளிக்கிறேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ரசிகர் ஒருவர் உங்களுக்கு தோனியுடன் பிடித்த நினைவு எது? என்ற கேள்வியை எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த வாசிம், தோனி இந்திய அணியில் இணைந்த போது, 1 அல்லது 2 வது ஆண்டில், அவர் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. அவர், கிரிக்கெட் மூலம் ரூ.30 லட்சம் சம்பாதிக்க வேண்டும், பிறகு அதனைக் கொண்டு தனது சொந்த ஊரான ராஞ்சியில் நிம்மதியாக வாழ வேண்டுமென கூறியதை இன்றளவும் என்னால் மறக்க இயலாது என்றார்.

Categories

Tech |