ஈரோடு மாவட்டத்தில் காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணத்திற்கு மறுத்த காதலனை, காவலர்கள் உதவியுடன் இளம்பெண் கரம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஈரோடு மாவட்டத்தில் முனிசிபல் சத்திரம் என்ற பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பெண்ணை கடந்த 9 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.தற்போது ஜோதி 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் பார்த்திபன் திருமணத்திற்கு மறுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து ஜோதி அளித்த புகாரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேசினார் .
இதனை தொடர்ந்து போலீசார் முன்னிலையில் காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள கோவிலில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் முடிந்த மணக்கோலத்தில் காவல் நிலையத்தில் இருவரையும் வாழ்த்தி போலீசார் வழியனுப்பி வைத்தனர்.