கடலில் தத்தளித்த மகனை காப்பாற்ற சென்ற தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
நேற்று முன்தினம் நார்போல்க் கடற்கரையில் டேனி என்ற பெண் தனது மகன் மற்றும் அவனது நண்பனுடன் தனது நேரத்தை போக்கிக் கொண்டிருந்தார். டேனியின் மகன் மற்றும் அவரது நண்பன் கடலில் விளையாடிக் கொண்டிருந்த சமயம் திடீரென தண்ணீரில் சிக்கி தடுமாறுவதை டேனி கவனித்துள்ளார். பின்னர் சிறிதும் யோசிக்காமல் பிள்ளைகளை காப்பாற்ற உடனடியாக கடலில் குதித்துள்ளார் டேனி. அவரைத் தொடர்ந்து அங்கிருந்த சிலரும் கடலுக்குள் குதித்து சிறுவர்கள் இருவரையும் மீட்டனர்.
ஆனால் பிள்ளைகளை காப்பாற்ற கடலில் குதித்து டேனியை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அதற்குள் தகவல் அறிந்து விரைந்து வந்த முதல் உதவி குழு அவரை கரைக்குக் கொண்டு வந்து சிகிச்சை மேற்கொண்டனர். ஆனாலும் அவரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் கூறுகையில் உயிரிழந்த பெண்ணின் மகன் என்ன நடக்கிறது என்பது புரியாமல் ஒருவித பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது மனதிற்கு பெரும் கஷ்டத்தை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.