Categories
உலக செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு… பச்சை நிறத்தில் நாய்குட்டி… வைரலாகும் புகைப்படங்கள்.!!

நாய் ஒன்று பச்சை நிறத்தில் குட்டி போட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

கொலராடோ நாட்டில் வசித்துவருபவர் கேடி வில்லியம்ஸ். இவர் அமி என்று அழைக்கப்படும் மூன்று வயது நாய் ஒன்றை வளர்த்துவந்தார். அமி நாய் கிரேட் டேன் வகையைச் சேர்ந்தது. சில நாள்களுக்கு முன்பு எமி நாய் ஒன்பது குட்டிகளைப் போட்டுள்ளது. அதில் ஒரு நாய்க்குட்டி மட்டும் பச்சை நிறத்தில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் வில்லியம்ஸ்.

Image result for Dog gives birth to green puppy: 'It was so shocking when

இது குறித்து அவர் கூறுகையில், “முதலில் அந்த நாய்க்குட்டியை நாங்கள் கறுப்பு அல்லது காவி நிறம் என்று நினைத்தோம். பின்னர் மொபைல் வெளிச்சத்தில் பார்த்தபோதுதான் நாய்க்குட்டி பச்சை நிறத்தில் இருந்தது.

Image result for Dog gives birth to green puppy: 'It was so shocking when

இதைக்கண்டு முதலில் அதிர்ச்சிதான் அடைந்தோம். ஆனால் பிலிவெர்டின் (biliverdin) எனப்படும் வேதிப்பொருள் காரணமாக நாய்க்குட்டி பச்சை நிறத்தில் பிறக்க வாய்ப்புள்ளது என்பதை ஒரு செய்தித்தாளில் படித்திருந்தேன்.

Image result for Dog gives birth to green puppy: 'It was so shocking when

மேலும் பச்சை நிறம் நிரந்தரம் கிடையாது சீக்கிரமே பழைய நிறத்திற்கு மாறிவிடும். இந்த வகை அரிதானதுதான்; ஆனால் ஒருபோதும் ஆபத்தானது இல்லை. எங்களுக்கு பச்சை நிறம் நாய்க்குட்டி ரொம்ப பிடிச்சிருக்கு. பார்ப்பதற்கு ஷாம்ராக் நாய்க்குட்டி போலவே இருக்கிறது” எனத் தெரிவித்தார்.தற்போது பச்சை நிறம் நாய்க்குட்டியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது

Categories

Tech |