காதல் கணவர் ஹேம்நாத் தன்னை சித்திரவதை செய்வதாக மாமனாரிடம் நடிகை சித்ரா பேசிய குரல் பதிவு ஆதாரமாகக் கொண்டு ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை காரணமாக அவரது கணவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சீரியலிலும், நிஜத்திலும் ஹேம்நாத் சித்ராவிற்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் தொழிலதிபர் என நம்பி காதல் வலையில் வீழ்ந்துள்ளார் சித்ரா. சீரியலில் களைகட்டிய சித்ராவும் குமாரனும் நடன திறமையால் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த ஹேம்நாத் சித்ராவை கடுமையாக திட்டியுள்ளார். இதன்பின்னர் இனிமேல் தன்னால் கதிர் உடன் ஆட முடியாது என்று முல்லை பலரது முன்னிலையில் சொல்ல, சீரியல் காதலை பிரித்து வைத்துள்ளார் ஹேம்நாத். இதனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீரியலில் எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்று சீரியல் குழுவினர் குமாரனையும் சித்ராவையும் மீண்டும் சேர்த்து வைத்தனர்.
இதற்கு முக்கிய காரணமாக கதிர் முல்லைக்கு முதலிரவு காட்சி, முத்தக்காட்சி வைத்தது ஹேம்நாத் கோபத்தின் உச்சிக்கு சென்று விட்டார். இதனால் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். பதிவு திருமணம் செய்து கொண்டபிறகு சித்ராவின் சீரியல் வாழ்க்கையில் அதிக அளவில் தலையிட்டு பிரச்சனை செய்து வந்துள்ளார்.
ஹேம்நாத்தின் டார்ச்சர் எல்லை மீறியதால் ஒருகட்டத்தில் மாமனார் ரவிச்சந்திரனிடம் செல்போனில் அழைத்து பேசிய சித்ரா இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்கும் இருக்கும் நிலையில் ஹேம்நாத் தன்னை டார்ச்சர் செய்வதாக கூறி கண்ணீர் விட்டுள்ளார். இந்த குரல் பதிவை ஹேம்நாத் அளித்தது சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் ரெக்கவரி சாஃப்ட்வேர் மூலம் அவர் பேசிய குரல் பதிவை மீட்ட காவல்துறையினர் அதனை ஆதாரமாகக் கொண்டு ஹேம்நாதை கைது செய்துள்ளனர்.
மேலும் அவரை விசாரித்ததில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது .சித்ராவின் கணவர் 5 மேற்பட்ட பெண்களுடன் காதலாக பேசி ஏமாற்றியதும், பல பப்புகளில் விடிய விடிய போதையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. ஹேம்நாத் கொடுத்த தொல்லைகள் குறித்து அவருடன் பணியாற்றி நண்பரிடம் சித்ரா தெரிவித்ததாக கூறப்படுவதால், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிறையில் அடைக்கப்பட்ட ஹேம்நாத் ஆர்டிஓ விசாரணைக்கு அழைத்து வரவும் திட்டமிட்டுள்ளனர். ஹேம்நாத் தொடர்ந்து தொல்லை கொடுத்த காரணத்தினால் சிரித்த முகத்துடன் இருந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.