Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கணவருக்கு தெரியாமல்… காதலனை மணந்த பெண்… பின் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!!!

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய திருமணத்தை மறைத்து தன்னுடைய காதலனை கரம் பிடித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

தனக்கு திருமணமாகி 8 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதையே மறைத்து காயத்தாறு அருகில் உள்ள ஒரு இளைஞனோடு தொடர்ந்து செல்போனில் பேசி தனது காதலை வளர்த்து வந்துள்ளார் அந்த இளம்பெண்.. காதலன் நெருக்கடி கொடுக்க, உறவினர் வீட்டிற்கு  செல்வதாக கணவரை ஏமாற்றி கடந்த 20ஆம் தேதி தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரத்தில் வைத்து காதலனை திருமணம் செய்துள்ளார்.

அதன்பின் தன்னுடைய திருமண போட்டோக்களை தனது செல்போனில் ஸ்டேட்டசாக  வைத்துள்ளார். இது பற்றி தெரியாத ஒன்றும் அறியாத அந்த அப்பாவி கணவன் தனது மனைவியை காணவில்லை என்று சேரன்மகாதேவி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார்..

இதையடுத்து சேரன்மகாதேவி காவல்துறையினர்  விசாரணைசெய்து அந்த பெண் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.. இதனால் உண்மை அனைத்தும் வெளிச்சத்துக்கு வர காதலன் முன்னால் அழுது புரண்டுள்ளார் அந்த இளம்பெண். இப்போது காதலனும் கைவிட்டு, கணவனும் கைவிட்டு காப்பகத்தில் இருக்கிறார்.

Categories

Tech |