கொரோனா வைரசால் கனடாவில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 71 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸின் அச்சுறுத்தலால் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் கனடாவிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 655 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு இத்தாலியிலும் அதிகம். அந்நாட்டில் இந்த வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 631 ஆக உயர்ந்துள்ளது.
டென்மார்க்கில் 31 மற்றும் பின்லாந்தில் 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல பிரான்சில் 30 பேர் இறந்ததுடன், 1,126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜெர்மனியில் 2 பேர் இறந்துள்ளதுடன், 1, 112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிரீஸில் 73, ஐஸ்லாந்தில் 50, அயர்லாந்தில் 21 மற்றும் நெதர்லாந்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், கனடாவில் இதுவரை யாரும் உயிரிழக்காத நிலையில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 71 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.