பிரேசிலில் உருவான மின்னல் வெட்டு அதிக தூரத்தை கடந்து உலக சாதனையை படைத்துள்ளது
பிரேசிலில் ஒரு நாள் மழை பெய்த பொழுது 709 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்னல் வெட்டு ஏற்பட்டு புதிய உலக சாதனை படைத்து இருப்பதாக உலக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மழை பெய்த நாளில் ஏற்பட்ட மின்னல் வெட்டு சாதனை படைத்துள்ளது.
ஏறக்குறைய 709 கிலோமீட்டரை இந்த மின்னல் வெட்டு கடந்து இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த தூரமானது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருந்து வாஷிங்டன் நகரத்திற்கு இடையே இருக்கும் தூரத்தின் அளவு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி அமெரிக்காவில் ஏற்பட்ட மின்னலே அதிக தூரத்தை கடந்த மின்னல் என சர்வதேச வானிலை ஆய்வு மையத்தால் அங்கீகரிக்கப்பட்டு இருந்தது. அந்த மின்னல் வெட்டு 321 கிலோமீட்டர் வரை சென்ற நிலையில் அதைவிட இரண்டு மடங்கு அதிக தூரம் ஏற்பட்ட மின்னலாக இந்த மின்னல் புதிய சாதனையை எட்டியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.