Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடினா ? யாருன்னு… எந்த மூலையிலோ… எந்த கிராமத்திலோ… எந்த தெருவிலோ… போய் கேட்டு பாருங்க.. செம ஹேப்பியாக பேசிய ஈபிஎஸ் !!

சமீபத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதில், திரைப்பட இயக்குனர் சந்திரசேகர் குறிப்பிட்டார்கள்..  சாமானிய ஒருவர் நாட்டினுடைய முதலமைச்சராவது அவ்வளவு எளிதல்ல என்று சொன்னார். உண்மையிலேயே அது அப்படித்தான். திரைப்படத்தில் எப்படி ஒரு முத்திரை பதிக்கிறாரோ, அதேபோல தான் அரசியலிலும் முத்திரை பதிக்க வேண்டும் என்று சொன்னால்,  எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துவிடாது, ஒரு சிலருக்கு தான் கிடைக்கும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

திரைத்துறைக்கும் எங்கள் இயக்கத்திற்கும் மிகுந்த தொடர்பு.  ஏனென்றால் இரண்டு தலைவர்களுமே திரைத் துறையில் இருந்து வந்தவர்கள். அது எந்த கட்சிக்குமே கிடைக்காது. எங்களுடைய இயக்கத்தை தோற்றுவித்தவர்களே… இந்த கலைத்துறையை சேர்ந்தவர்கள் தான். இங்கே  செல்வமணி இருக்கின்றார், சந்திரசேகர் இருக்கின்றார். உங்களை போல இயக்குனர்கள் அற்புதமான படைப்பை படைக்கின்ற போது,  அந்த நடிகர்கள் மக்களிடத்தில் செல்வாக்கு பெற்று விடுவார்கள்.

ஆனால் கட்சியிலே அப்படி அல்ல, தெருவில் நின்று பல பேரை பார்த்து… படிப்படியாக படிக்கட்டில் எப்படி 15வது படிக்கட்டில் ஏறி பிடிக்கிறோமோ,  அப்படி ஒவ்வொரு படிக்கட்டாக ஏறித்தான் இந்த நிலைக்கு வர முடியும். உங்களுடைய திறமையால்தான் அவர்கள் வெற்றி பெறுவார்கள். அவருடைய திறமையிலே அல்ல.. நீங்கள் சொல்லிக் கொடுத்து, நடிக்க வைத்து, அந்த கதைகள் மக்களிடத்திலே பதிகின்ற அளவிற்கு அந்த திரைப்படம் உருவாக்குகின்ற போது..  வெற்றி படமாக அமைகிறது, அவரும் வெற்றி பெற்று விடுகிறார்.

கிட்டத்தட்ட 34 வயதில் நான் சட்டமன்ற உறுப்பினரான இருந்தேன். பலபேருக்கு அது தெரியாது. ஏனென்றால் நான் அரசியலில் அமைதியாக இருந்தேன். அப்படி அமைதியாக இருந்த காரணத்தினாலே பல பேருக்கு என்னுடைய உழைப்பு தெரியாது. ஆனால் என்னுடைய தொகுதி எந்த மூலையிலே, எந்த கிராமத்திலே, எந்த குறுக்குத் தெருவிலே போய் கேட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி என்றால் அத்தனை பேரும் சொல்வார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |