Categories
தேசிய செய்திகள்

இரு சுவருக்கிடையே… மூச்சு திணறி சிக்கி தவித்த சிறுவர்கள்..!!

ஆந்திராவில் இரண்டு குறுகிய சுவர்களுக்கு இடையே தவறி விழுந்த 2 சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

ஆந்திர மாநிலம்  குண்டூர் மாவட்டம் நூலகப்பேட்டையில் இருக்கும் பள்ளியின் சுவரையொட்டி ஒரு குறுகிய சுற்றுச்சுவர் உள்ளது. இந்தநிலையில் அந்த சுவரில் மேல் ஏறி இரு பள்ளி சிறுவர்கள் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தனர். இருவருக்கும் வயது 4. அப்போது எதிர்பாராதவிதமாக ரமணபாபு மற்றும் முன்னா ஆகியோர் இரு சுவர்களுக்கு இடையில் தவறி விழுந்து விட்டனர்.

Image result for Two Children Stuck in Middle of Two Walls Guntur

இதையடுத்து இருவரும் கதறி அழுதுள்ளனர். அதைதொடர்ந்து சத்தம் கேட்டு மூச்சு திணறி தவித்து கொண்டிருந்த இருவரையும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் லாவகமாக லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்டனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  இதுகுறித்து விசாரணை நடத்தினர். இரு சிறுவர்கள் சுவருக்கிடையே சிக்கி கொண்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |