Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில்…! ”2 நாளில் 3,902 மரணம்” 4.34 லட்சம் பேருக்கு கொரோனா …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 2 நாட்களில் மட்டும் 3902 பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

Why are we panicked about coronavirus — and calm about the flu ...

 

நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,517,614 பேர் பாதித்துள்ளனர். 88,446 பேர் உயிரிழந்த நிலையில், 330,203 பேர் குணமடைந்துள்ளனர். 1,050,873 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 48,092 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

Preparing for Coronavirus to Strike the U.S. - Scientific American ...

 

கொரோனா வைரசால் தாக்கத்தால் நேற்று ஒரே நாளில்  மட்டும் 1,931 பேரை இழந்து அமெரிக்கா கதறி வருகின்றது. இதனால் கொரோனா  தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14,779ஆக அதிகரித்துள்ளது. 434,581 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 22,828 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 396,974 மருத்துவமணையில் இருக்க்கும் நிலையில் 9,279 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கின்றது.

கடந்த 2 நாட்களில் 3903 பேர் உயிரிழந்துள்ளனர்ப். நேற்று 1,971 பேரும் , இன்று 1,931பேரும் இறந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது 

Categories

Tech |