அமெரிக்காவை சின்னாபின்னமாக்கும் கொரோனா வைரசால் நேற்று ஒரே நாளில் 1970 பேர் உயிரிழந்துள்ளது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,430,590 பேர் பாதித்துள்ளனர். 82,025 பேர் உயிரிழந்த நிலையில், 301,940 பேர் குணமடைந்துள்ளனர். 1,046,625 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 47,890 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
கொரோனா வைரசால் தாக்கத்தால் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,970 பேரை இழந்து அமெரிக்கா கதறி வருகின்றது. கொரோனா தொற்றால் 400,335 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 12,841 பேர் இறந்துள்ளனர். 21,674 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ள நிலையில் 365,820 மருத்துவமணையில் இருக்கின்றனர். இதில் 9,169 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கின்றது.