அடுத்து அடுத்து துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தை சேர்ந்த ஷைலேந்திரா என்பவர் ஒரு வருடத்திற்கு முன்பு பிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவர் ஷைலேந்திராவின் தாய் மற்றும் தம்பி விஷால் என நான்கு பேரும் ஒரே வீட்டில் வசித்துவந்தனர். இந்நிலையில் தனது தாய் மற்றும் மனைவியுடன் அடிக்கடி ஷைலேந்திரா தகராறு செய்துள்ளார். நேற்று தனது மனைவியுடன் சண்டை போட்ட ஷைலேந்திரா பேஸ்புக் நேரலையில் என் குடும்பத்தாரின் செயல்கள் மன உளைச்சலை கொடுக்கின்றது.
நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். இனியும் என்னால் வாழ முடியாது என பதிவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து தனது மனைவியை ஷைலேந்திரா துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு, பின்னர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன் பிறகு அங்கு வந்த தம்பி அண்ணன் மற்றும் அண்ணி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரும் அதே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொடர் துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்த பொழுது மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 3 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.