Categories
உலக செய்திகள்

“12 லட்சம் குழந்தைகள் உயிருக்கு ஆபத்து” ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

உலகம் முழுவதிலும் 6 மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள் உயிர் இழக்கும் வாய்ப்புகள் இருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொது சுகாதார அமைப்பின் ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தெற்காசியாவில் ஊரடங்கு அமலில் இருப்பதனால் வழக்கமான சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தை பிறப்பு, நோய் தடுப்பு, சிசு பாதுகாப்பு, குடும்ப கட்டுப்பாடு போன்றவற்றில் தொய்வு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் பள்ளிகள் மூலமே குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதாகவும் தற்போது பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் குழந்தைகள் உணவின்றி தவிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உணவில்லாமல் ஊட்டச்சத்து கிடைக்காமல் குழந்தைகள் பெரும் அபாயத்தை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அடுத்த 6 மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் 3 லட்சம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் பிரேசில், ரஷ்யா, பாகிஸ்தான், சோமாலியா மற்றும் மாலி போன்ற நாடுகளில் உயிரிழப்பு அதிகளவு இருக்குமெனவும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக யுனிசெப் சுட்டிக்காட்டியுள்ளது.

Categories

Tech |