இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா, தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆரம்பித்து 18ஆம் ஆண்டு துவக்க விழா. செப்டம்பர் 14, 2005 இல் நாம மதுரையில் மாபெரும் அரசியல் மாநாட்டை கூட்டி, லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் கட்சியை அறிவித்த நாள், இந்த நல்ல நாள். ஒரு நல்ல நோக்கத்துக்காக மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட கட்சி. இந்த நல்ல நாளில் நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்ற இலக்குக்கு, நிச்சயமாக எங்களுடைய கழகம் பயணிக்கும் என்பதை இந்த நல்ல நாளில் உங்கள் எல்லோரிடமும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலுமே நலத்திட்ட உதவிகள் கொடுத்து, கொடியேற்றி, தமிழகம் முழுவதும் இன்றைக்கு அனைத்து மாவட்டங்களிலும் கட்சியின் 18 ஆம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கழக தொண்டர்கள் அத்தனை பேருக்கும் தலை கழகத்தின் சார்பாக, கேப்டன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த கட்சி திமுக – அதிமுக என்கின்ற மாபெரும் இரண்டு இயக்கங்கள் இருக்கும்போது, மாபெரும் தலைவர்கள் இருந்த பொழுதே, கேப்டன் அவர்களால் மக்களுக்காக உழைத்து, இந்த தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்டு நேர்மையாக, வறுமையே இல்லாத ஒரு தமிழகமாக உருவாக்க வேண்டும் என்று நல்ல லட்சியத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி. நிச்சயமாக ஒரு சிறு தோய்வு இப்போது இருந்தாலும்,
கேப்டன்னுடைய ஹெல்த்தில் தோய்வு இருந்தாலும், எந்த நோக்கத்திற்காக இந்த கழகம் ஆரம்பிக்கப்பட்டதோ அதை ஒட்டுமொத்த தொண்டர்களின் துணையோடும், மக்களின் ஆதரவோடும், தெய்வத்தின் ஆசியோடும் நிச்சயம் நாங்கள் அடைவோம் என்று நாங்கள் இந்த நேரத்தில் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.