ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணுங்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்ய 370 வது சட்டப்பிரிவை நீக்கிய மசோதாவை மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் பெற்றது. இதை தொடர்ந்து காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரித்து , இந்தியாவுடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்துக் கொண்டது.
மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆத்திரமடைந்த பாகிஸ்தான் கடந்த 9_ஆம் தேதி சீனாவுக்கு சென்று இந்தியாவுக்கு எதிராக ஆதரவு கோரியது. மேலும் பல்வேறு நாடுகளிடம் பாகிஸ்தான் முறையிட்டதோடு , உலக நாடுகளை தங்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி வருகின்றனது. இதற்கான வேலையில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் பேசிய போது , காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளார்.அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தால் இருநாடுகளும் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியுள்ளார். இந்த தகவலை வெள்ளை மாளிகையின் ஊடக துணை செயலர் ஹோகன் கிட்லி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.