பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் முடிந்தவுடன் அவர் கைதாவார் என்று உள்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமரான ஷபாஸ் ஷெரீப்பின் அரசை எதிர்த்து முன்னாள் பிரதமரான இம்ரான் கான் ஆர்ப்பாட்டங்கலில் ஈடுபட்டு வருகிறார். அந்த ஆர்ப்பாட்டங்களின் போது கலவரத்தை தூண்டியதாக இம்ரான் கான் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்காக இம்ரான் கான் பெஷாவர் நகரின் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியிருந்தார். எனவே அவருக்கு மூன்று வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், இம்மாதம் 25ஆம் தேதி வரை அவரை கைது செய்ய முடியாது. இதனைத்தொடர்ந்து பெஷாவர் நகரத்திலிருந்து இஸ்லாமாபாத்திற்கு செல்ல இம்ரான்கான் தீர்மானித்திருக்கிறார்.
இந்நிலையில் அந்நாட்டின் உள்துறை அமைச்சரான ராணா சனாவுல்லா, இந்த ஜாமீன் தேதி முடிவடைந்த உடன் இம்ரான்கான் கைது செய்யப்படவிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.