பாகிஸ்தான் நாட்டில் இன்னும் 6 தினங்களுக்குள் பொதுத் தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமரான இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த மாதம் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையற்ற தீர்மானத்தை கொண்டு வந்தனர். எனவே, அவரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஷபாஸ் செரீப் புதிய பிரதமராக பதவியேற்றார். ஆனால், இம்ரான்கான் வெளிநாட்டு சதியால் தான் தன் ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக குற்றச்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், இம்ரான்கான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு, தன் ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்றிருக்கிறார். தற்போது வரை இந்த பேரணி நடக்கிறது. இதில், இம்ரான் கான் பேசியதாவது, நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். தேர்தல் தேதி உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.
அதுவரை நான் இங்கே போராட்டம் நடத்த தீர்மானித்தேன். ஆனால் நேற்று ஒரே நாளில் இந்த அரசு, நாட்டை அட்டூழியமாக்கிவிட்டது. எனவே, இந்த அரசு நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும். இன்னும் ஆறு தினங்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வேண்டும். இல்லையெனில், தலைநகரை நோக்கி லட்சக்கணக்கான ஆதரவாளர்களோடு மீண்டும் பேரணி செல்வேன் என்று கூறியிருக்கிறார்.