Categories
உலக செய்திகள்

“பெண்களின் ஆடை தான் பாலியல் வன்கொடுமைக்கு காரணம்!”.. பாகிஸ்தான் அதிபர் சர்ச்சை பேச்சு..!!

பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பிற்கு பெண்களின் அரைகுறை ஆடைகள் தான் காரணம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த 20ஆம் தேதியன்று ஒரு பத்திரிகைக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அரைகுறையாக ஆடையை பெண்கள் அணியும் போது ஒரு ஆணுக்கு அது தாக்கத்தை உண்டாக்கும். இது பொதுவான அறிவு என்று கூறினார். மேலும் அவரிடம் பாலியல் வன்கொடுமைகள் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வருவது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அது மிகவும் மோசமானது என்று தெரிவித்தார். ஒரு பெண்ணின் ஆடை பாலியல் துன்புறுத்தலுக்கு காரணமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த இம்ரான்கான், இது ஒருவர் வசிக்கும் சமுதாயத்தை பொறுத்தது. ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் இது போன்ற விஷயங்களை பார்த்ததில்லை எனில் அது அவர்களுக்கு தாக்கத்தை உண்டாக்கும்.

உங்களைப் போலவே ஒரு சமூகத்தில் நீங்கள் வளரும் பட்சத்தில் அது தாக்கத்தை உண்டாக்காது என்று கூறியுள்ளார். பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 11 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.

கடந்த 6 வருடங்களில் இதுபோல 22,000 வழக்குகள் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர், பாலியல் வன்கொடுமை அதிகரிக்க பெண்களின் ஆடை காரணம் என்று பேசியதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Categories

Tech |