பிரிட்டன் நாட்டில் பிரபல எழுத்தாளர் தாக்கப்பட்டது நியாயமில்லாதது என்று பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டனின் பிரபலமான எழுத்தாளரான சல்மான் ருஷ்டி அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஒரு நபர் அவரை கத்தியால் தாக்கினார். அதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் உயிர் பிழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய வம்சாவளியினரான சல்மான் ருஷ்டி வெளியிட்ட சாத்தானின் வசனங்கள் என்னும் புத்தகம் கடந்த 1988 ஆம் வருடத்தில் வெளியானது. அதில் முஸ்லீம் மத நம்பிக்கைகளை புண்படுத்துவது போன்ற கருத்துக்கள் இருந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
அவருக்கு அந்த சமயத்தில் பல எதிர்ப்புகளும் கிளம்பியது. இஸ்லாமிய நாடுகள் அவருக்கு கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதற்கு பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான்கான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, இது மிகவும் பயங்கர மற்றும் துயரமான சம்பவம். அவர் மீதான கோபத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தாக்குதல் மேற்கொள்வது நியாயமில்லாதது என்று கூறியிருக்கிறார்.