விதிமீறல்களுக்கு அதிக அபராதம் விதிப்பது சாலை விபத்துகளைக் குறைக்கும் என்று அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளை செய்து வருகின்றது. ஆனாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை. பெரும்பாலான விபத்துக்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் நிகழ்கின்றது. தமிழக அரசு ஹெல்மெட் அணியாமல் மற்றும் விதியை மீறி செல்பவர்களுக்கு அதிக அபராதம் விதித்துள்ளது. இதனால் சாலை விபத்து குறையும் என நம்புகிறது.
இந்நிலையில் அகில இந்திய போக்குவரத்து துறை தொழிற்நுட்ப அலுவலர்கள் சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விதிமீறல்களுக்கு அதிக அபராதம் விதிப்பது சாலை விபத்துகளைக் குறைக்கும் என்றார். மேலும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் சாலை பாதுகாப்பு குழு தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 24 சதவிகித ம் விபத்துகள் குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.