உலகில் மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று அடிப்படை மனித உரிமைகள். ஆகையால் இது குறித்த விரிவான தகவலை காண்போம்.
உலகெங்கும் டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி ஐநா சபை டிசம்பர் 10 1948ஆம் வருடம் மனித உரிமைப் பிரகடனம் என்கின்ற 20க்கும் மேற்பட்ட விதிமுறைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை வெளியிட்டு அதில் உள்ள விதிமுறைகளை மீறுவதற்கு ஐக்கிய சபையுடன் ஒருங்கிணைந்து இருக்கும் எந்த நாட்டு மக்களுக்கும் நாட்டிற்கும் உரிமை கிடையாது என்று அறிவித்தது.
அதை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அது பிரகடனம் செய்தது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் இதுகுறித்து ஒரு விழிப்புணர்வு இயக்கம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து ஆலோசிக்கப்படும். நம் சுதந்திர இந்தியாவிலும் இந்த மனித உரிமைகள் ஆணையத்தின் விதிமுறைகள் அனைத்தும் செல்லும். ஆனால் நம் மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததால் இது பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது. ஆதலால் பலர் தங்களுக்குத் தெரியாமலேயே மனித உரிமை மீறலில் ஈடுபடுகின்றனர்.
பலர் அவர்களுக்கு உரிய உரிமை பறிக்கப்பட்டு மனித உரிமை மீறல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது சுதந்திர இந்தியாவின் கொடுமையான அவலநிலையாக பார்க்கப்படுகிறது. ஆகையால் ஒவ்வொரு தனி மனிதனும் மனித உரிமைகளின் 30 விதிமுறைகளை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும் அதனை நம் வாழ்வின் ஒவ்வொரு இடங்களிலும் கடைபிடிப்பது மட்டுமல்லாமல் அதனை மீறுவோர்களை சட்டத்தின் முன் சுட்டிக்காட்டி தகுந்த தண்டனையை வாங்கித் தர வேண்டும். இது உலகத்தில் மனிதராக பிறந்த ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். ஐநா வெளியிட்ட மனித உரிமை பிரகடனம் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகளை இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக காண்போம்.
1 வாழும் உரிமை
2 உணவுக்கான உரிமை
3 நீருக்கான உரிமை
4 கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம்/பேச்சுரிமை
5 சிந்தனைச் சுதந்திரம்
6 ஊடக சுதந்திரம்
7 தகவல் சுதந்திரம்
8 சமய சுதந்திரம்
9 அடிமையாக உரிமை
10 சித்திரவதைக்கு உட்படா உரிமை
11 தன்னாட்சி உரிமை/சுயநிர்ணயம்
12 ஆட்சியில் பங்கு கொள்ள உரிமை
13 நேர்மையான விசாரணைக்கான உரிமை
14 நகர்வு சுதந்திரம்
15 ஊடக சுதந்திரம்
16 கல்வி உரிமை
17 மொழி உரிமை
18 பண்பாட்டு உரிமை
19 சொத்துரிமை
20 தனிமனித உரிமை
இவையாவும் அடிப்படை மனித உரிமைகளாகும். இது மனிதனாக பிறந்த அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.