சென்னையில் இளைஞர் மீது போலீசார் நடத்திய தாக்குதல் குறித்து காவல் ஆணையர் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் சேர்ந்த சதாம் உசேன் என்பவர் மருந்து வாங்க சென்றபோது அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கண்ணன் மருந்து வாங்கக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார். இதனிடையே சதாம் உசேனுக்கு காவல்துறையினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சதாம் உசேன் அடித்து தரதரவென காவல் நிலையத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வந்த நிலையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியது. இதில் ஊரடங்கை மீறி வெளியே செல்கிறார் என்றால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், காவல் நிலையம் அழைத்து செல்வது எப்படி ? சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.