நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கதா குடிநீர் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த சமயத்தில் மக்கள் தங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் மாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கொய்யா பழம், நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துகுடி உள்ளிட்ட பழங்கள், கீரை வகைகள், சத்தான தானிய வகைகள், கபசுரக் குடிநீர் உள்ளிட்டவை நோய் எதிர்ப்பு சக்திக்காக பரிந்துரைக்கப்பட்டு வந்தது.
இந்த வரிசையில் தற்போது கதா குடிநீர் என்ற ஒன்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது முதலில் மூன்று கிளாஸ் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில், மஞ்சள் ஒரு டீஸ்பூன், பின் இஞ்சி துருவிப் போட்டு சில நிமிடம் கொதிக்க வைக்கவேண்டும். பின் மிளகு, ஏலக்காய், பட்டை ஆகியவற்றை இடித்தும், துளசியை கசக்கியும் போட வேண்டும். அதன்பின் 20லிருந்து 30 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதனை அடுப்பில் இருந்து இறக்கி தேன் அல்லது வெல்லம் கலந்து வெது வெதுப்பான சூட்டில் அருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதே போல் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவை இருந்தால் கதா குடிநீரை காலையும் மாலையும் டீ அல்லது காபிக்கு பதிலாக அருந்தினால் நல்ல பலனைத் தரும்.