நாளை திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் முக. ஸ்டாலின் தலைமையில் நடைபெறம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.
இந்த கூட்டத்தின் நோக்கம் என்னெவென்றால் திமுக நிர்வாகிகள் மீது அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரின் தூண்டுதலின் பேரில் பொய் வழக்குகள் அதிகமாக போடுகிறார்கள். சட்ட விரோத ஜனநாயக விரோத காவல்துறை கைது குறித்து விவாதிக்கப்படும் என்று சொல்லி உள்ளார்கள். தற்போது கூட திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ். பாரதி கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமீன் பெற்ற நிலையில் இது குறித்தெல்லாம் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ஆளும் அரசு பதியும் வழக்குகளை எப்படி சட்டரீதியாக எதிர்கொள்வது என்பது குறித்து இந்த ஆலோசனையில் இருக்கும் என்று தெரிகிறது.