ஒவ்வொரு மொபைல் போனும் சர்வதேச மொபைல் கருவி அடையாளஎண் (IMEI) எனப்படும் 15 இலக்க தனிப்பட்ட எண்ணுடன் வருகிறது. இந்த எண் ஒவ்வொரு மொபைல் சாதனத்துக்கும் அடையாள சான்றிதழ் ஆகும். உங்களது தொலைபேசியின் பெட்டியில் (அ) அமைப்புகள் பிரிவில் எப்போதும் IMEI-ஐ சரிபார்த்துகொள்ளலாம். உங்களது மொபைலை கண்காணிக்க இந்த எண்ணைப் பயன்படுத்த முடியும் என்பதால் அதனை எழுதி பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம் ஆகும். இந்த 15 இலக்க IMEI எண்ணைப் பயன்படுத்தி உங்களின் தொலைந்த (அ) திருடப்பட்ட மொபைலை எப்படிக் கண்காணிக்கலாம் மற்றும் தடுக்கலாம் என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.
# உங்களது கணினியில் CEIRன் அதிகாரப்பூர்வமான இணையதளத்துக்கு செல்ல வேண்டும். இப்போது டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மட்டுமே இந்த அரசு சேவையானது வழங்கப்படுகிறது.
# மொபைலின் பிராண்ட், விலைப் பட்டியலை பதிவேற்றுதல் ஆகிய அனைத்து தொலைந்து போன மொபைல் சாதன விபரங்களையும் நிரப்பவேண்டும்.
# மாற்று மொபைல் எண்ணை நிரப்பி Get OTP ஐகானை கிளி செய்யவேண்டும்.
# தொலைந்துபோன போன் இருப்பிடக் கோரிக்கையை நிறைவு செய்ய, நீங்கள் பெற்ற OTP-ஐ உள்ளிட்டு சமர்ப்பி பட்டனை கிளிக் செய்யவேண்டும்.
# அதன்பின் ஒரு கோரிக்கை ஐடி எண்ணை பெறுவீர்கள். அந்த எண்ணைக் கொண்டு திருடப்பட்ட மொபைல் கிடைத்ததும் லாக்கை அன்லாக் செய்ய உதவும்.
இவ்வாறு மேற்கூறிய வழிமுறைகளை நீங்கள் செய்தவுடன் போன் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க நெட்வொர்க் ஆப்ரேட்டருக்குத் தெரிவிக்கப்படும். அத்துடன் அந்த குறிப்பிட்ட IMEI எண்ணை முடக்குமாறு உங்களது ஆபரேட்டரிடம் கேட்கலாம். CEIR இணையதளத்தை பயன்படுத்தி உங்களது தொலைந்த போனின் நிலையையும் பட்டியலில் சேர்க்கும்படி கேட்கப்படும். அத்துடன் உங்களது போன் கண்டுபிடிக்கப்பட்ட ,பின் IMEI எண்ணை அன்பிளாக் செய்யலாம்.