இந்தியாவில் 90’ஸ் கிட்ஸ் களின் பேவரட் என்று அழைக்கப்படும் கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த சேனல் வார்னர் ப்ரோஸ் நிறுவனத்துடன் இணை இருப்பதால், தன்னுடைய ஒளிபரப்பை நிறுத்தப் போவதாக சமீபத்தில் தகவல்கள் தீயாக பரவியது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் தற்போது ஒரு டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 1990 முதல் 2000 காலகட்டத்தில் நாங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சேனலாக இருந்தோம். எங்களுடைய சேனலில் ஒளிபரப்பாகும் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் பலருக்கும் மிகவும் பிடிக்கும். பலருடைய குழந்தை பருவத்தை அழகான நாட்களாக மாற்றிய பங்கு எங்களுடைய சேனலுக்கு இருக்கிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக எங்களுடைய சேனல் மூடப்படுவதாக செய்திகள் வெளியானதால் பலரும் இணையதளத்தில் தங்களுடைய வருத்தங்களையும் துக்கத்தையும் வெளிப்படுத்தினர். அதோடு இணையம் முழுவதும் மீம்ஸ்களை தெறிக்க விட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் வைத்திருந்தனர். ஆனால் ரசிகர்கள் வருத்தப்படுவது போல் கார்ட்டூன் நெட்வொர்க் சேனலை மூடப் போவதில்லை. எங்களுக்கு தற்போது 30 வயது தான் ஆகிறது. நாங்கள் இன்னும் சாகவில்லை என்று பதிவிட்டுள்ளனர். மேலும் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஏராளமான லைக்குகளை குவித்ததோடு ரீவீட்டும் விட்டு செய்து வருகின்றனர்.
Y’all we're not dead, we're just turning 30 😂
To our fans: We're not going anywhere. We have been and will always be your home for beloved, innovative cartoons ⬛️⬜️ More to come soon!#CartoonNetwork #CN30 #30andthriving #CartoonNetworkStudios #FridayFeeling #FridayVibes
— Cartoon Network (@cartoonnetwork) October 14, 2022