Categories
இந்திய சினிமா சினிமா

“ஊரை விட்டு போக போறேன்”…. என்ன குற்றவாளி போல காட்டுறாங்க…. நடிகர் பாலா எடுத்த திடீர் அதிர்ச்சி முடிவு….!!!!!

பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி பாலா. இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ள நிலையில், மலையாள சினிமாவில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் பாலா திடீரென தனக்கு கேரளாவில் தங்க விருப்பமில்லை எனவும் சென்னைக்கு செல்ல போகிறேன் என்றும் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் உன்னி முகுந்தன் தயாரித்து நடித்த செஃபிக்கிண்டே சந்தோஷம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது.

இந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில் நடிகர் பாலா தனக்கும், தன்னுடன் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நடிகர் உன்னி முகுந்தன் சம்பளம் கொடுக்கவில்லை என்று பரபரப்பாக பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் நடிகர் உன்னி முகுந்தன் நடிகர் பாலா உட்பட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சம்பளம் கொடுத்த காசோலையை மீடியா முன்பு காண்பித்து பாலா சொன்னது பொய் என்று நிரூபித்தார். இந்த பிரச்சனையால் நடிகர் பாலா தற்போது மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறாராம்.

இது குறித்து பாலா கூறியதாவது, சமீபகாலமாக நடந்த சில பிரச்சனைகளால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த படத்தில் வேலை செய்த தொழில்நுட்ப கலைஞர்கள் தான் என்னிடம் சம்பளம் கொடுக்கவில்லை என்று கூறினார்கள். ஆனால் தற்போது அவர்கள் அனைவரும் அமைதியாகிவிட்டதால், என்னை மட்டும் குற்றவாளி என்பது போல் சித்தரிக்கிறார்கள் என்று வேதனையோடு கூறியுள்ளார். மேலும் நடிகர் பாலா ஊரைவிட்டு செல்கிறேன் என்று கூறியது திரையுலக பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |