Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் திமிர் பிடித்தவளா”…. எனக்கு தென்னிந்தியாவை விட, வட இந்தியாவில் தான் நல்ல வாய்ப்பு வருது…. நடிகை டாப்ஸி அதிரடி….!!!!!

தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்ஸி. இவர் யாரையும் மதிப்பது கிடையாது எல்லோரிடமும் திமிராக பேசுகிறார் என்று சமீப காலமாகவே இணையதளத்தில் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகை டாப்ஸி தன்னை பற்றி பரவும் தகவல்களுக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, நான் நடிக்க வந்த புதிதில் எனக்கு அவ்வளவாக கதைகளை தேர்வு செய்ய தெரியாது. ஆனால் தற்போது அப்படி இல்லை.

எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டும் தான் அந்த கதையை தேர்வு செய்வேன். இல்லையெனில் எவ்வளவு பெரிய பட நிறுவனமாக இருந்தாலும் அதில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன். நான் நல்லது மற்றும் கெட்டது எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேராக சொல்லி விடுவேன். நான் இப்படி பேசுவது சிலருக்கு பிடிக்காததால் தான் என்னை திமிர் பிடித்தவள் என்று கூறுகிறார்கள். ஆனாலும் நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டேன். எனக்கு தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் தான் நல்ல வாய்ப்புகள் வருகிறது என்று கூறியுள்ளார். மேலும் நடிகை டாப்ஸி கூறியது தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |