தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் டாஸ்மாக் கடைகள், பார்கள் என அனைத்தும் மூடி உத்தரவிட்டிருந்த நிலையில் அதன் பின்னர் ஐந்து மாதங்களுக்குப் பிறகு கொரோனா தாக்கம் குறைந்ததையடுத்து டாஸ்மாக் கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது வரை பார்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், டாஸ்மார்க் கடைகள் மட்டும் இயங்கி வருகின்றது.
இருந்த நிலையில் நாளடைவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயலில், பட்டாபிராம், திருநின்றவூர், கொரட்டூர், பாடி, அம்பத்தூரில் சட்டவிரோதமாக பார்கள் திறந்துள்ளன.இதனால் டாஸ்மாக் வருவாய் பாதிப்படைத்துள்ளது. இங்கு ஒரு குவாட்டருக்கு சுமார் 50 ரூபாய் விலை உயர்வாக விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது.