Categories
உலக செய்திகள்

சட்ட விரோதம் இல்லை…”கருக்கலைப்பிற்கு அனுமதி”… வெளியான புதிய சட்டம்..!!

கருவைக் கலைப்பது சட்டப்பூர்வமானது என புதிய சட்டத்திற்கு அர்ஜென்டினாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினாவில் கருக்கலைப்பு சட்டபூர்வமாக பட்டது. அந்த நாட்டின் மக்கள் தொகை 4.4 கோடி. ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கானோர் கருக்கலைப்பு செய்துகொள்கின்றனர். எனினும் கருக்கலைப்பு இத்தனை ஆண்டுகளாக சட்டவிரோதம் என குறிப்பிட்டு வந்தது. ஆனால் கருக்கலைப்பு ஒருவரது விருப்பம் சார்ந்ததாக இருக்கவேண்டும். இதனை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கருக்கலைப்புக்கு சட்டத்தில் அனுமதி இல்லாததால் சட்டவிரோதமாக பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு நடைபெறுகிறது. இதனை தடுப்பதற்காக கருக்கலைப்புக்கு சட்டத்திற்கு அனுமதி தேவை என போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்த பிரச்சனைக்கு அர்ஜென்டினா நாட்டில் விவாதம் நடைபெற்றது. தொடர்ந்த விவாதத்திற்குப் பிறகு கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து இந்த சட்டத்திற்கு ஆதரவாக 33 பேரும், எதிர்ப்பு தெரிவித்து 29 பேரும் வாக்களிப்பு செய்தன. இதை அடுத்து இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து கருக்கலைப்புக்கு ஆதரவான போராட்டக்காரர்களும், பரப்புரையாளர்கள் ஏராளம் ஓரணியில் திரண்டு கொண்டாட்டங்கள் நடத்தினர். பெண்களின் கர்ப்ப காலத்தின் 14 வாரங்கள் வரை தன்னார்வத்துடன் கருக்கலைப்பு செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |