Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அனுமதி இல்லாம செய்யுறாங்க…. காட்டுக்குள் வசமாக சிக்கிய நபர்கள்… விருதுநகரில் பரபரப்பு…!!

அனுமதியின்றி காட்டுப் பகுதியில் பட்டாசு தயாரித்தவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி வீடுகளில் மற்றும் காட்டுப்பகுதிகளில் செட் அமைத்து பட்டாசுகளை தயார் செய்கின்றனர். இந்நிலையில் வெம்பக்கோட்டை காவல்துறையினர் வெற்றிலையூரணி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் அளித்த புகாரின் பேரில் தெற்கு ஆனைக்குட்டம் காட்டுப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது கோமாளி பகுதியில் வசித்து வரும் கணேஷ், கருப்பசாமி மற்றும் முத்துராஜா ஆகியோரை அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக காவல் துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். இதனையடுத்து கருப்பசாமியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 60 கிலோ பட்டாசுகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான கணேஷ் மற்றும் முத்துராஜாவை வெம்பக்கோட்டை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |