தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் கற்றலில் குறைபாடு போக்குவதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இதில் முதல் கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி போன்ற 12 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்பட உள்ளது. இதற்காக அரசு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட உள்ள தன்னார்வலர்கள் தினமும் ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல். நாடகம் மற்றும் பொம்மலாட்டம் என்று புதுமையான முறையில் பாடங்களை நடத்த உள்ளனர்.
இந்நிலையில் இல்லம் தேடி திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐ.ஏ.எஸ். அதிகாரியை தமிழக அரசு நியமிக்க உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வணிகத்துறை இணை ஆணையராக ஆனந்த் மோகன் மற்றும் வணிகத்துறை இணை ஆணையராக மெர்சி நியமிக்கப்பட்டுள்ளார. அதனைப் போலவே தமிழ்நாடு இ சேவை மையத்தின் இணை இயக்குனராக பாலச்சந்தர் மற்றும் தமிழ்நாடு அரசு முன்னேற்ற கழகத்தின் நிர்வாக இயக்குனராக நிஷாந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து உதவி துணை ஆசிரியர் டாக்டர் மோனிகாவை உதகை மலை பகுதிகள் மேம்பாடு திட்ட இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி துணை ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி ஐ.ஏ.ஸ். தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று அரசு தெரிவித்துள்ளது.