Categories
உலக செய்திகள்

இளைஞர்களே உஷார் …குறிவைத்து தாக்கும் இதயநோய் …ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

துபாயில் வசித்து வரும் இந்தியர்களில் பெரும்பாலான இளைஞர்கள் இதயநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

துபாயில்  இந்தியர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும்  வசித்து வருகிறார்கள்.அதனால் மருத்துவர்கள்  அங்கு வசித்து வரும் மக்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு இதயநோய்க்கான ஆய்வை தொடங்கினார்கள். அங்கு வசிக்கும் இந்தியர்களில் 10- 6 பேர் இதய நோயால் உயிர் இழக்கின்றனர்  என்றுஆய்வில் கண்டுயாறிந்தனர் . இந்நிலையில்  பொதுமக்களுக்கு இதய நோய் விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவ கருத்தரங்கு நடத்த வேண்டுமென்று முடிவு செய்துள்ளது. அவ்வாறு நடத்தப்பட்ட  இதய நோய் விழிப்புணர்வுக்கான கருத்தரங்கில் மக்கள் அனைவரும்  கலந்து கொண்டனர். அதனை காணொலி காட்சி மூலமாக இந்தியத் துணைத் தூதரான டாக்டர் அமன் புரி தொடங்கி வைத்தார்.

மேலும் வளர்ந்து வரும் மருத்துவ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  தங்களது உடல் நலனை பாதுகாப்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த கருத்தரங்கில் இதய அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் பிரஜேஸ்மிட்டல் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியபோது, துபாய் உள்ளிட்ட அமீரகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு உயிரிழந்த இந்தியர்களை குறித்த  ஆய்வு செய்யப்பட்டது .அந்த ஆய்வில் அபுதாபி பகுதியில் இறந்தவர்களில் 10ல் – 7பேர் இதயநோயால் பாதிக்கப்பட்டு  உயிரிழந்துள்ளனர் என்று கூறினார் .

இந்த 1வருடத்தில் மட்டும் இதய நோய் பாதிப்பு காரணமாக131பேர்உயிரிழந்துள்ளனர்.   அதில்  20 வயதுமுதல் 40 வயதுக்குஉட்பட்ட  57பேர் உயிரிழந்துள்ளனர் .  அவர் அனைவருமே   இளைஞர்கள் என்பது மிகுந்த வருத்தை அளிக்கிறது . தற்போதுஅந் நாட்டில்  வசித்து வரும் இந்தியா மற்றும்  ஆசிய நாட்டை சேர்ந்தவர்களிடம்  இந்த பாதிப்பு அதிகமாக கண்டுயாறியப்பட்டு வருகிறது .இதற்கு காரணம் வேலை இடத்தில் உள்ள பிரச்சனைகள், வாழ்க்கை முறையில் மாற்றம், உணவு பழக்கவழக்கம் போன்ற காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகின்றன என்று கூறியுள்ளனர். மேலும் இந்த பாதிப்பை தடுக்க  உடல் எடை குறைப்பு, உடற்பயிற்சி செய்வது, உணவு பழக்கங்களை மாற்றிக் கொள்வது ஆகியவற்றின் மூலம் இதனை தடுக்கலாம் என்று மருத்துவர்கள்அறிவித்து உள்ளார்கள் .

Categories

Tech |