பிரசாத் ஸ்டுடியோவிற்கு இளையராஜா வர மறுத்துள்ளதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டு காலமாக பிரசாத் ஸ்டுடியோவில் இசையமைத்து வந்தார். ஆனால் ஸ்டுடியோவிலிருந்து இளையராஜாவை உரிமையாளர்கள் காலி செய்ய சொல்லியுள்ளனர். இதையடுத்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் மட்டும் செல்ல சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியதை அடுத்து இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அவர் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வருகை தருவார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து இளையராஜா வருகையை முன்னிட்டு பிரசாத் ஸ்டுடியோவிற்கு பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பு அங்கு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பிரசாத் ஸ்டுடியோவிற்கு இளையராஜா வருகை ரத்து செய்வதாக அவரது செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.மேலும் உயர்நீதி மன்ற அனுமதியை தொடர்ந்து பிரசாத் ஸ்டுடியோவிற்கு சென்று இளையராஜாவின் இசை பொருட்களை எடுத்து செல்ல முயன்றார்.
அப்போது அறையின் கதவு உடைக்கப் பட்டிருந்ததாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து இளையராஜா தற்போது மன உளைச்சலில் இருப்பதால் இன்று பிரசாத் ஸ்டுடியோ வருகை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நீதிமன்ற அனுமதியுடன் பிரசாத் ஸ்டூடியோவுக்கு இளையராஜா இன்று செல்லவிருந்த நிலையில் திடீரென அவரது திடீர் முடிவு கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.