அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் விளம்பர படம் இடம்பெற்றுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஒரு நாளைக்கு 3 லட்சம் சுற்றுலா பயணிகள் கூடுவர். இங்குள்ள கட்டிடங்களில் உலகப்புகழ் பெற்ற சாதனையாளர்கள் தொடர்பான படங்கள் மற்றும் பிரமாண்ட விளம்பரங்கள் திரையிடப்படும். இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை ஒளிபரப்பு செய்ய ஒரு செயலி உடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதற்கான விளம்பர படத்திலும் நடித்துள்ளார். இந்த விளம்பர படம் டைம்ஸ் சதுக்கத்தில் உயரமான கட்டிடத்தில் திரையிடப்பட்டது. இதை இளையராஜா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.