இளவரசியின் தொலைபேசி உளவு பார்ப்பதாக கூறிய விவகாரத்தில் துபாய் மாகாணம் எந்த வித கருத்துகளையும் வெளியிடவில்லை.
இஸ்ரேல் நாட்டின் NSO குழுமத்தின் PEGASUS SOFTWAREரினால் தொலைபேசியின் தகவல்கள் உளவு பார்ப்பதாக செய்தி வெளிவந்தது. இந்த பட்டியலில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், இந்தியாவின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலரும் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் துபாய் மாகாணத்தின் இளவரசிகளான லதிஃபா மற்றும் ஹயா ஆகியோரின் தொலைபேசிகளும் உளவு பார்ப்பதாக தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு துபாய் நாட்டிலிருந்து வெளியேறி படகு ஒன்றில் தப்பிய லதிஃபா கடலில் மீட்கப்பட்டார். அவரை மீண்டும் துபாய் மாகாணத்திற்கு தற்போதுள்ள இந்திய அரசு அனுப்பி வைத்தது. இதன் பிறகு அவர் துன்புறுத்தப்படுவதாகவும் வீட்டு சிறையில் இருப்பதாகவும் வீடியோ வெளியிட்டார். இதனை அடுத்து சமீபகாலமாக அவரது தோழிகளுடன் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதில் குறிப்பாக லதிஃபாவின் உளவு விவகாரம் தொடர்பாக எந்த கருத்தும் துபாய் மாகாணம் வெளியிடவில்லை.