Categories
உலக செய்திகள்

மருத்துவமனையிலிருக்கும் இளவரசர் பிலிப்… உடல்நிலை எப்படி இருக்கிறது…? வெளியான முக்கிய தகவல்…!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் உடல்நிலை குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

99 வயது நிரம்பிய பிரிட்டன் இளவரசர் பிலிப் உடல்நல குறைபாட்டினால் பிப்ரவரி 16 ஆம் தேதி King Edward VII’s  என்ற லண்டன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு  என்ன பாதிப்பு ஏற்பட்டிருந்தது என்பது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. அதற்குப் பிறகு மார்ச் 1ம் தேதி அவர் St Bartholomew’s என்ற மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இளவரசர்  பிலிப்  17 நாட்களாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்று அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும், பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள தகவலில், ” St Bartholomew’s மருத்துவமனையில் இளவரசர் பிலிப்பின் இருதய பிரச்சனைக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது . தற்போது அவர் ஓய்வில் இருக்கிறார். அதற்காக இளவரசர் பிலிப் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையிலேயே இருப்பார்” என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |