இத்தாலிய அணியின் யூரோ கால்பந்து இறுதிப் போட்டியின் வெற்றியை முன்னிட்டு அந்நாட்டின் ஜனாதிபதிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்க வில்லை என்று இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மீது இத்தாலிய கால்பந்து ரசிகர்கள் குற்றம் சாட்டிள்ளார்கள்.
இங்கிலாந்த் இளவரசரான வில்லியம் தன்னுடைய குடும்பத்துடன் யூரோ கால்பந்திற்கான இறுதி போட்டியினை காண்பதற்காக Wembley என்னும் மைதானத்திற்கு வருகை தந்துள்ளார். இதனையடுத்து யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணி மோதி கொண்டுள்ளது. அதில் இத்தாலிய அணி யூரோ கால்பந்து இறுதிப் போட்டிக்கான வெற்றிக் கோப்பையை அடைந்துள்ளது.
இந்நிலையில் யூரோ கால்பந்து போட்டியை காண்பதற்காக வருகைபுரிந்த இளவரசர் வில்லியம், இத்தாலிய அணி வெற்றி பெற்றதற்கான வாழ்த்துக்களை இத்தாலிய ஜனாதிபதியிடம் தெரிவிக்கவில்லை என்றும், அவர் இத்தாலிக்கு வெற்றிக் கோப்பையை கொடுப்பதற்கு முன்பாகவே புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் இத்தாலிய கால்பந்து ரசிகர்கள் இளவரசர் வில்லியம் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்கள்.
ஆனால் இதனை வாஷிங்டன் அரண்மனை திட்டவட்டமாக மறுத்ததோடு மட்டுமின்றி இளவரசர் வில்லியம் வெற்றிக் கோப்பையை வழங்கும் நிகழ்ச்சி முடிந்த பின்பே மைதானத்திலிருந்து புறப்பட்டுள்ளார் என்பதையும் உறுதிசெய்துள்ளது.