சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண்ணின் உயிரை காப்பாற்ற தவறிய அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள வாகோஃப் ரிமாண்ட் சிறையில் இலங்கை பெண் ஒருவர் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து டப்ளின் நடைமுறையின்படி அந்த இலங்கை பெண் மால்டாவுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அந்த இலங்கை பெண்ணின் வசிப்பிட உரிமைக்கு மால்டா தீவு தான் பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையில் அவர் தங்கியிருந்த சிறையில் கண்காணிப்பு கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 2௦18ல் ஜூன் 12 ஆம் தேதி அன்று அந்த இலங்கைப் பெண் தனது மேல் சட்டையினால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவர் தூக்கிலிடப்பட்ட நான்கு நிமிடங்களுக்கு பின்னரே இந்த தகவலானது கட்டுப்பாட்டு அறைக்கு தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து மூன்று சிறை காவலர்கள் அந்தப் பெண் இருந்த அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில் இரு சிறை காவலர்கள் அந்த இலங்கைப் பெண்ணை காப்பற்றியதுடன் அவருக்கு மருத்துவ முதலுதவி செய்ய தவறியுள்ளனர். இவர்கள் மூவரைத் தவிர்த்து நான்காவதாக ஒரு பெண் காவலர் உதவிக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஆனால் அவர்கள் நால்வரும் இணைந்து அந்த பெண்ணை நிர்வாண கோலத்தில் விட்டுச் சென்றுள்ளனர். இதன் பிறகு சுமார் 10 நிமிடங்கள் கழித்தே கட்டுப்பாட்டு அறையிலிருந்த அவசர மருத்துவ குழுவினற்கு தகவல் வந்துள்ளது.
இதனை அடுத்து 18 நிமிடங்களுக்கு பிறகு இவர்கள் வந்து அப்பெண்ணை மீட்டு பேசல் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்கள் கழித்து அதாவது ஜூன் 29 ஆம் தேதி மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக இறந்துவிட்டார் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் அந்தப் பெண்ணை காப்பாற்ற தவறிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தனது கடமையை செய்ய தவறியதால் ஒரு இளம்பெண்ணின் உயிர் பரிதாபமாக பறிபோயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.