இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் சிவராமன் காலையில் வேலைக்கு சென்றுவிட்டார். அதன் பின்னர் சிவசங்கரி உள்பக்கமாக கதவை பூட்டி கொண்டுள்ளார்.
இதனையடுத்து நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் அவரது மாமியார் பூமாரி சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது சிவசங்கரி மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சுத்தமல்லி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவசங்கரியின் உடலை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.