தனது சொந்த மகளையே பொருளாதார காரணத்தால் விற்பதற்கு முடிவு செய்துள்ளதாக ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது கைப்பற்றிய தலிபான்களின் கீழிருக்கும் தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டில் மிர் நசீர் என்னும் நபர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது நசீரின் குடும்பம் தலிபான் பயங்கரவாதிகளின் ஆட்சியில் சிக்கியுள்ளார்கள்.
இதனையடுத்து பொருளாதார சூழ்நிலையின் காரணத்தால் நசீரால் தனது குடும்பத்தை காப்பாற்ற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அவர் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதாவது தன்னுடைய சொந்த 4 வயது மகளையே கடை ஊழியர் ஒருவருக்கு சுமார் 420 பவுண்டுகளுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.