Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியும் கருவிவை வடிவமைத்த சென்னை ஐஐடி!

கொரோனா அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியும் கருவியை சென்னை ஐஐடி குழுவினர் வடிவமைத்துள்ளனர். கை கடிகாரம் போல உள்ள கருவி மூலம் உடல் வெப்பநிலை, இதயத் துடிப்பை அறியலாம். ஆக்ஸிஜன் அளவை பரிசோதித்து அறிகுறி இருந்தால் உடனடியாக இந்த கருவி தெரியப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 6,750 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பிசிஆர் கருவிகள் மூலம் சோதனை நடைபெற்று வரும் நிலையில் கொரோனா அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறியும் கருவிவை சென்னை ஐஐடி குழு வடிவமைத்துள்ளது. இதற்கு அனுமதி கிடைத்தவுடன் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |