Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி சொன்னா கலைஞர் ஒத்துக்க மாட்டாரு; ஆனால் அது தான் உண்மை – மெர்சலாகிய உதயநிதி

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் அவர்களும் சொல்வார், நம்முடைய தலைவர் அவர்களும் சொல்வார். இளைஞர் அணியும்,  மாணவர் அணியும் இணைந்து பணியாற்ற வேண்டும். ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல என்று சொல்லுவார்.

எங்களுக்குள் எப்பவுமே அந்த ஆரோக்கியமான போட்டி நடந்து கொண்டே இருக்கும், அப்பேற்பட்ட அண்ணன் எழிலரசன் அவர்களுடைய தொகுப்பில் இந்த புத்தகத்தை வெளியிடுவதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.இதில் வந்து திருவாரூர் முத்துவேல் கருணாநிதி என்னும் நான் என்ற  தலைப்பிலே… இதற்கு முன்னோதரமாக நம் தலைவர் அவர்கள் பொறுப்பேற்ற போது…

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று அந்த பெயரை சொல்லி அந்த முதலமைச்சர் பொறுப்பிலே அமர்ந்ததை ஒரு முன்னுதாரணமாக எடுத்து,  திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான், அதில் திமுக என்று அந்த முதல் எழுத்தில் வருவது போல் வடிவமைத்திருக்கிறார்கள்.

அதாவது திமுக என்றாலே கலைஞர் தான் என்கின்ற அர்த்தத்தோடு அவர் அதை வடிவமைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் அதுதான் உண்மை என்று கூட நான் நினைக்கிறேன். திமுக இல்லாமல் கலைஞர் கிடையாது,  கலைஞர் இல்லாமல் திமுக கிடையாது. ஆனால் கலைஞரிடம் கேட்டீர்கள் என்றால்,  அவர் அதை கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார்.

Categories

Tech |