தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவது இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கி வருகின்றனர். இந்நிலையில் கோவை பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி பட்டியலின பிரிவு உள்ளிட்ட ஆறு பிரிவுகளை சேர்ந்த மக்கள் தேவேந்திரகுல வேளாளராக அங்கீகாரம் வழங்கியதாக தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணசாமி, “எங்களுடைய கோரிக்கை தேவேந்திர குல வேளாளர் என்பது மட்டுமல்ல பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்பதும் தான் என்று கூறினார். தற்போது மாநில அரசு ஒரு உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அமைத்து ஆய்வு செய்து தேவேந்திரகுல வேளாளராக அங்கீகரிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேவேந்திரகுல வேளாளர் என்ற அங்கீகாரம் என்பது தான் எங்களுடைய கோரிக்கை மற்றும் பட்டியலின பிரிவில் இருந்து நீக்க நீக்க வேண்டும் என்று கூறினார். பத்திரிக்கையாளர்கள் இதனால் மக்களின் அதிகாரம் உரிமைகள் பறிபோகாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு மக்களுக்கு அந்த அடையாளத்தை மாற்றினாலே அவர்கள் சுதந்திரமாக இருப்பார்கள் தங்களுக்கு தேவையானதையும், பொருளாதார வளர்ச்சியையும் அவர்களே சந்தித்துக்கொள்வார்கள். சென்னை போன்ற பெரிய நகரங்களில் எஸ்சி என்று சொன்னாலே வாடகை வீடு கொடுக்க மறுத்து வருவது வேதனை அளிக்கிறது என்று கூறினார்.