முன்னணி நடிகை சமந்தா கொரோனாலிருந்து ஜெயிப்பதற்கான வழிகளை கூறியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கொரோனா குறித்து கூறியுள்ளார். அப்போது இவர் கூறியதாவது, கொரோனா நம்மைச் சுற்றி முற்றுகையிட்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் அனைவரும் கொரோனா அச்சத்தில் தான் இருக்கிறார்கள்.
கட்டாயம் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும். கூடிய விரைவில் அனைவரும் எடுத்துக் கொள்ளக் கூடிய காலமும் வரும். முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, எச்சரிக்கையுடன் இருந்தாலே நாம் கொரோனாவை ஜெயித்துவிடலாம். மேலும் நாம் இப்பொழுது இருக்கும் இக்கட்டான சூழலை கடந்து வருவோம் என்றும் கூறியுள்ளார்.